Powered By Blogger

Tuesday, December 21, 2010

[படங்கள் இணைப்பு]19.12.2010 அன்று தஞ்சை திருவாரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம். 2010/12/21 , 6:13 AM [UTC]


தஞ்சை மாவட்டம் திருவையாறு ஏ.என்.எஸ் அரங்கில்19-12-2010 அன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு திருவையாறு பகுதி ஒருங்கிணைப்பாளர் சோ.கெளதமன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் வீரக்குமரன், சதா முத்துகிருஷ்ணன், தஞ்சை கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்க்றிஞர் மணி.செந்தில் என்ற திலீபன், வழக்கறிஞர் அ.நல்லதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கட்சி கட்டமைப்பு, நிர்வாகிகள் தேர்வு, உறுப்பினர் சேர்க்கை ஆகியவைப் பற்றி கலந்தாய்வு செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. திருச்சி மாநில கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துக் கொள்ள வரும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களிடம் இம்முடிவுகளை தெரிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டன.இக்கூட்டத்தில் திருவையாறு நகர, ஒன்றிய கட்சி நிர்வாகிகள்சுமார் 100 தமிழர்கள் கலந்துக் கொண்டனர். முன்னதாக அரங்கத்தில் செந்தமிழன் சீமான் அவர்களின் வீரிய மிக்க உரை வீச்சுக்கள் திரைக் கட்டி ஒளிப்பரப்பப்பட்டன.

No comments:

Post a Comment