Powered By Blogger

Sunday, December 19, 2010

Kavithai

இருந்தான் தம்பி
என்
தம்பி
இருந்தான்!

உள்ளே
இருந்தான்!

ஆம்
உனக்குள்ளே
எனக்குள்ளே
உணர்வுள்ள
நமக்குள்ளே
இருந்தான்!

தொரப்பாடி சிறைக்குள்ளே
துளியளவே
இருந்தான்!

கடல்
கடந்த
தமிழர்களின்
கருத்தான
எண்ணத்தில்
கடலளவு
இருந்தான்!

என்றும்
இருப்பான்!

அடங்கா பெரு நெருப்பின்
அணையாத
உணர்வழகன்!

சிரிப்புக்குள் எகத்தாளம்
சிறிதளவே
சேர்த்து
வைத்து
எதிரிகளை மேடையில்
ஏராளக்
கேள்விகளால்
குடைந்தெடுக்கத்
தெரிந்திருக்கும்
குடிசையிலே
பிறந்து
வந்த
என்
குற்றமற்ற
தமிழழகன்!

ஈழப் பெருந்தலைமை
எழுப்பி வைத்தத்
தமிழ்
விழிப்பை
ஊர்தோறும்
உசுப்பிவிட
உச்சரிப்பால் உழைப்பதற்கு
உயர்ந்தெழுந்த
உயிரழகன்!

கைவிரித்து அவன்பேச
கை
கட்டி
வாய்
மூடி
கவனிக்கும்
கூட்ட
மொத்தம்
அவனோடு
அவனாக
அவன் சொல்லும் கருத்தோடு
அப்படியே
பயணிக்கும்!

அதைத்தானே
அதிகாரம்
அச்சத்தில்
கவனிக்கும்!

அடிக்கடிதான்
அழைத்தழைத்து
சிறைக்குள்ளே
போட்டடைக்கும்!

இடுக்கில் வரும்
நீதியினால்
இழுத்துவிட
முயன்றாலும்
இரக்கமற்று
இழுத்தடிக்கும்!

நடக்குமுறை அத்தனையும்
நாதி
யற்ற
தமிழர் மேல்
அடக்கு
முறை
ஆனாலும்
அதற்கெல்லாம் அஞ்சாமல்
கிழக்கு
முறை
தேடி
கிளர்ந்தெழத்தான்
வைத்த
அந்தக்
கிழத்தான் பெரியாரில்
கிளைத்
தெழுந்த
கலை
வளத்தான்
என்
தம்பி
இதற்கெல்லாம்
அஞ்சான்!
இமியளவும்
துஞ்சான்!

அலுக்காத உடற்பயிற்சி
அழகாக்க
அவன்
உடலை
சேழிப்பான
தேக்கெடுத்துச்
சேதுக்கி
வைத்தப்
பலகையியென…

அடுக்கடுக்காய்
நூலெடுத்து
அடிக்
கோடும்
தான்
போட்டு
அன்றாடம்
படித்ததனால்
அணை
கட்டித்
தேக்கிவைத்த
ஆற்றல்
மிகு
அறிவோடு…

சிறிதேனும் ஓய்வின்றி
தினம் தினமும்
விவாதித்துச்
சேர்த்துக் கொண்ட
அந்தப்
பேரறிவாடு…

வெளியே
வந்தான்
பார்
என் வெற்றித்
தமிழ்ப்
பிள்ளை!

ஆணவக் கடுநெஞ்சர்
அடுக்கடுக்குத்
தடை
தாண்டி
மீனவத்
தமிழ்
உறவோர்
மீளாத்
துயர் துடைக்க
வேலா
மீனைப்போல்
வீறு
கொண்டு
எழுந்த
தம்பி
வேலூர் சிறை
திறந்து
வெளிச்சமாய்
வந்தான்
பார்!

எண்ணிய முடிக்க
எண்ணி
இன்னும்
மிடுக்காக
ஏராளக் கேள்விகளால்
எதிரிகளைப்
பின்னி
எடுப்பான்
பார்
என்
பிள்ளைத்
தமிழ்ச்
சீமான்!

எத்தடைகள் வந்தாலும்
எதற்கும்
அஞ்சாமல்
அன்னைத்
தமிழுக்கே
தன்னைக்
கொடுப்பான்
பார்
என்
தம்பி
தமிழ்ச்
சீமான்!

அவன் பயணம் தொடரட்டும்!

அவன்
விதைக்கும்
கருத்தெல்லாம்
அருந்தமிழர் நெஞ்சத்தில்
குருத்தாக
முளைக்கட்டும்!

கோபச்
சுடர்களென
குபு
குபென
கிளைக்கட்டும்!

நெடுங்காலக்
கனவான
நீதி…
தமிழருக்காய்
நெறி
பிறழா
தலைவர் விரல்
பிடித்து
நடக்குமிவன் பெரும்
பேச்சும்
விளைக் கட்டும்!

விளைக்கட்டும்!
- அறிவுமதி

No comments:

Post a Comment